![இலவச 'அவுட் கோயிங்'கை நிறுத்தியது 'ஜியோ நிறுவனம்.|Jio | live tamil news 7 tv channels](https://i.ytimg.com/vi/iLLoSwZEHkg/maxresdefault.jpg)
#jio #CaptainNews | #TamilNews
இலவச, 'அவுட் கோயிங்'கை நிறுத்தியது 'ஜியோ நிறுவனம்.ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின், ஜியோ தொலை தொடர்பு சேவை நிறுவனம், அதிரடியான சலுகை அறிவிப்புகளுடன், ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஜியோ இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களை இலவசமாக அழைக்கலாம். இதற்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், நேற்றுடன் இந்த இலவச சேவையை, ஜியோ நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள், இனிமேல், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அதற்கு சமமான இணைய சேவையை, அவர்கள் பெறலாம். அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், சக ஜியோ வாடிக்கையாளர்களை, வழக்கம்போல் இலவசமாக அழைக்கலாம். 'லேண்ட்லைன்' இணைப்புகளுக்கும் கட்டணம் கிடையாது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
இலவச 'அவுட் கோயிங்'கை நிறுத்தியது 'ஜியோ நிறுவனம்.|Jio | live tamil news 7 tv channels | |
2 Likes | 2 Dislikes |
48 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 9 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét